Tuesday, June 21, 2011

21/06/2011

http://idlyvadai.blogspot.com/2011/06/blog-post_16.html
ஒன்று: அன்று அவ்வாறு சொன்ன பொது கலைஞர் ஆட்சி அதை விட மோசமாக இருக்கும்
என்று எதிர்பார்க்கவில்லை. (தமிழக மக்கள் எண்ணமும் அவ்வாறே இருந்தது.). பின்பு எதிர்பார்ப்பு தவறு என்று உணர்ந்தபின் எண்ணம் மாறுவது தான் இயற்கை. இதில் அதிசயம் ஒன்றும் இல்லை.
இரண்டு: தமக்கு நல்லது இல்லை என்றால் ஊருக்கே நல்லது இல்லை என்று நினைப்பது மனித குணம். காங்கிரஸ் தனக்கு ஆபத்து என்றால் நாட்டுக்கே கேடு என்று அலறும் (ராமதேவ், ஹஜாரே உண்ணாவிரதம்.) தனக்கு ஆபத்து என்றால் தமிழுக்கு ஆபத்து என்று அலறுவது தமிழ் இனத்தலைவர் .
அதே போல் அம்மையார் மீண்டும் வருவது தமக்கு நல்லது இல்லை என்று எண்ணிய ரஜினி, நாட்டுக்கே கேடு என்று அலறி இருக்கிறார்.

Friday, June 17, 2011

17/06/2011

http://www.sinthikkavum.net/2011/06/blog-post_3992.html
மனுவிற்குப் பிறகு எவ்வளவோ சிந்தனையாளர்கள் வந்து, பழைய சிந்தனைகளை மாற்றி
புதிய வழக்கங்களை, விதிமுறைகளை, வழக்கில் கொண்டு வந்து விட்டன. உதாரணத்திற்கு திருமண வயது இப்போது தொண்ணூற்று ஒன்பது
விழுக்காடு பதினெட்டிற்கு மேலேயே நடக்கின்றன; ராஜஸ்தானில், உத்தர் பிரதேசத்தில் ஓரிரு திருமணங்கள்
பதினைந்து வயதில் நடக்கலாம். அதே போல் தான் விதவை மறு மணமும் .
நாம் பதிய வேண்டியது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனு கூறிய அபத்தங்கள் என்ன
என்பது அல்ல; பின் வந்த காலங்களில் இந்துக்கள் புதிய சிந்தனைகளை ஏற்றுக்கொண்டு தம் செயல்களை, நடை முறைகளை
மாற்றிக் கொண்டார்கள் என்பதே. இன்னும் பல மாற்றங்கள் வரவேண்டும்
என்றிருக்கலாம். அதற்கு முயல்வோம்.
எனினும், குர்ஆனில் சொன்னது தான் இறுதி விதி,
இடைப்பட்ட ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளில் பற்பல மாற்றங்கள் அறிவியலிலும், சமூகவியலிலும், மாற்றங்கள் வந்துவிட்டாலும், குரான் அந்த கால கட்டத்த்ற்கு ஏற்றபடி சொன்னவற்றை இந்த கால கட்டத்தில்
மீள் பார்வை செய்வது தவறு;
அதில் சொன்ன படியே இப்போதும் செய்வோம் என்று சொல்லும்
இஸ்லாமியர்களை விட இந்துக்கள் மேல்
என்ற உண்மையைக் கூறுங்கள்.
இல்லை பகுத்தறிவுப்பாசறை இந்துக்களிடையே ஒரு காலத்தில் இருந்த பழக்க வழக்கங்களை மீண்டும் மீண்டும் அலுக்காமல் சொல்லுமே தவிர, இஸ்லாமிலும், கிருத்தவர்களிலும் இன்றும் உள்ள மூட அணுகுமுறைகளைப் பற்றி சொல்லக் கூடாதா?

Tuesday, May 17, 2011

17/05/2011

கலைஞர் செய்த துரோகம் தமிழ் நாட்டிற்கு அதிகமா அல்லது ஈழத்துக்கு அதிகமா என்று பட்டி மண்டபமே நடத்தலாம். ஈழத் தமிழர்கள் கொல்லப்படும் போது உண்ணாவிரதம் நாடகம் கேவலமானது; மைய அரசுடன் உருப்படியாக ஒன்றும் செய்ய வில்லை தான் என்று மனம் உருகி கலைஞர் அழ வேண்டும். போரின் உச்சத்தில், தில்லி சென்று தம் மகனுக்கும், மகளுக்கும், அவர் நண்பருக்கும், பேரனுக்கும் மந்திரி பதவி, எந்த துறை என்று பேரம் பேசியது, அது போல் வந்த துறைகளிலே அண்டத்தை விட பெரிய ஊழல் செய்து கின்னஸ் வரலாற்று ஊழல் செய்யுங்கால் (அந்த ஊழலை முதலில் வெளி வந்த போது அதை சண் தொலைகாட்சி தான் மீண்டும் மீண்டும் ஒளி பரப்பி நாற அடித்தது என்பதை மறந்து) ஆரிய திராவிட சதி என்று பிலாக்கணம் வைத்தது, என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
ழகரம் தயவு செய்து இதற்கு பதில் எழுத வேண்டும். (அனானியாக வருவதற்கு வருந்துகிறேன்.)

17/05/2011

"குடும்பத்தில் எல்லோரையும் அரசியலில் நுழைத்தது தவறு; மையத்தில் உள்ள அமைச்சர்கள் மட்டும் அல்ல, தமிழ்நாட்டிலும் பெரும்பாலான அமைச்சர்களும், அவர் அடிப்பொடிகளும் தினம் தோறும் ஊழல்கள் செய்து ஒவ்வொரு ஊரிலும், தொகுதியிலும் கழகத்தின் பெயரை நாற அடித்து விட்டார்கள்; ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் பணம் பலருக்கு போனது போல கலைஞர் தொலைக் காட்சிக்கும் வந்தது; கையொப்பம் இட்டது தயாளு அம்மாளுவும், கனிமொழியும்; தவிர திரை உலகில் குடும்பத்தின் நடவடிக்கைகள் பலரை நஷ்டம் அடைய வைத்தன " என்றும்
"இனிமேல், ஸ்டாலின் மாத்திரமே அரசியலில் இருப்பார், அவர் கழகத்தை தலைமை தாங்கி வழி நடத்துவார், அதற்கு, கழகத்தில் ஒரு மனதாக இதற்கு ஒப்புதல் இல்லை என்றால் குடும்பத்துக்கு வெளியிலிருந்து தலைவர் வருவார்; குடும்பத்தை விட கழகமே பெரியது; (வைகோ மீண்டும் வந்தால் தலைமை தாங்கி நடத்தட்டும்) " என்றும் தலைவரும், மற்ற கழக தொண்டர்களும் பேசினால் சரியாக இருக்கும்.

ஜெயலலிதாவிற்கு எவரும் வாக்கு அளிக்கவில்லை. இரண்டு கொள்ளிகளில், ஒன்று அதிகம் காந்துகிறது என்று தூர எறிந்து விட்டார்கள். அவர் அமைச்சரை எப்படி அவமானப்படுத்தினார் என்றெல்லாம் எழுத வேண்டாம். திசை மாறிப் போகிறோம். நம் சட்டைப்பையில் சாணத்தை வைத்துக்கொண்டு ஜெயின் புடவை ஓட்டையைப் பற்றி எழுதினால், நம் சீர்திருத்தப் பணி துவங்காது. கழகம் மு,கவின் கடந்த பதினைந்து வருட காலத்தில் சீர் அழிந்து விட்டது. அதை நேர் செய்வோம். இல்லையெனில், நிச்சயமாகச் சொல்கிறேன், இன்னும் ஐந்து ஆண்டு கழித்து அம்மாவைத் தூக்கி எறிய தமிழகம் நினைக்கும் போது கழகம் நல்ல கொள்ளி என்று காணப்பட வேண்டாமா? http://lakaram.blogspot.com/2011/05/blog-post.html

Thursday, May 5, 2011

vimarisinam:6/5/2011

பின்னூட்டக்காரர்கள் சொவது போல் கடல் ஒரு சாக்கு தான்.
அது போல் இங்கு நடக்காததற்கு சில காரணங்கள் :

# இலங்கை தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை; தனிதனி குழுக்கு (ஈழம், மலைத் தமிழர், வணிகம் செய்யும் கொழும்பு தமிழர்கள்) வெவ்வேறு பிரச்னைகள்; ஒன்று கூடி ஒரே வரிசை படுத்தவில்லை.
# ஈழத் தமிழர் தாம் இலங்கையில் வங்காளி-ஓடியாக்காரர்களுக்கு முன்பே வந்த அல்லது அங்கேயே ஆதி காலத்திலிருந்து வாழ்ந்து வரும் பூர்வ குடியினர் என்பதை நிலை நாட்டுவதும், தம் தனித்தன்மையை பாதுகாப்பதில் எடுத்துக்கொண்ட சிரமம், தற்போது சூழ்நிலையில் சிங்க ளவருடன் சேர்ந்தே இருந்துகொண்டு, தம் இனத்துக்கு நன்மை செய்வது எப்படி என்று சிந்திக்காதது. (ஒரு கோணத்தில் பார்த்தால் திராவிட நாடு என்று பேசுவதை விட்டு, தமிழ் நாடு இந்தியாவின் ஒரு பகுதி; மையத்திலும் நம் பங்கை பெறுவோம் என்று முடிவெடுத்தது போன்று).
# தமிழக தலைவர்கள் தொப்புள் கோடி உறவு என்று வசனம் பேசிக்கொண்டு, தம் கட்சிக்கு எது நன்மை என்று குறுகிய புத்தியுடன் செயல் பட்டது
# தமிழகத்தில் உள்ள அரசியல் சாராத தலைவர்கள், உ-ம: நெடுமாறன் தமிழரின் நலத்தை விட தமிழர் பெருமையையே அதிகம் கருதியது.
# தமிழ் நாட்டு பொது குடிமகன் இலங்கை பிரச்னையின் ஆழத்தை புரிந்து கொள்ள முயலாமல் எதாவது செய்ய வேண்டும் என்று உணர்வு பூர்வமாக நினைத்தது தவிர ஒன்றும் செய்யாதது.
# இந்திய அரசுக்கு இலங்கை பிரச்னையை சரிவர தெளிவு படுத்தாதது, அரசின் ஒரு பங்கு வகித்த தமிழர்கள், (எந்த கட்சியினர் ஆயினும்) தம் கடமை ஆற்றாதது. இது கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழர் செய்யத்தவறியது.

இவை இந்தியா திபெததவர்களுக்கு, வாங்க தேச வங்காளிகளுக்கு செய்தது போல் இலங்கை தமிழர்களுக்கு செயாதது என் என்று யோசித்தது.

இலங்கை தமிழர் குழுக்கள், ஈழ்ழத்தமிழர் செயல்முறை, தீவிரவாதிகள், விடுதல்லை போராட்டவாதிகள் என்ற உணர்வை ஏற்படுத்ததவறியது, etc தனி

5/5/2011

http://ashroffshihabdeen.blogspot.com/2011/05/blog-post_03.html
So Osama was only a creation of America; He did nothing bad on his own; America to be blamed for all his sins; Nobody said anything like this till last week, though one reader has told there are several evidences that he doing the American bidding.
I am yet to see one post that said, if he was the head of Al-qaida, and if it has caused so much destruction thro blasts and Twin-Tower type damages, he deserved to die.
I wish this polarisation does not turn uglier. Amen.

Tuesday, May 3, 2011

03/05/2011

மூன்று அல்லது நான்கு குழுக்கள் என்ற புரிதலை சாயம் தீட்டி கொச்சைப் படுத்துகிறீர்கள். அனைத்து தமிழர்களின் பிரச்னைகள் ஒன்றானால், இலங்கையிலேயே உள்ள பிற பகுதி தமிழர்கள் ஈழத்து அணுகுமுறையை ஆதரிக்காதது ஏன்? இலங்கை அரசில் தமிழர் அமைச்சர்களாக உள்ளனரே. அவரகள் தமிழர்கள் பிரச்னைகளை, தமழர் கோணத்தில் எடுத்துச் சொல்வது இல்லையா? மேலும், தோட்ட தமிழர்களை தம்மில் ஒரு பகுதியாக ஏன், தமக்கு இணையாக் நினைத்து அல்லது பாவித்து நடத்தினாரா? அவர்களை தாழ்வாக நடத்தினர் என்றும் அதனால் பிற தமிழர்களின் ஆதரவு ஈழத்து தமிழர்களுக்கு என்றும் கிட்டியதில்லை என்றே பதிவுகளில் கண்டிருக்கிறேன்.
இந்தியாவைப் பொறுத்தவை ஈழத்தமிழர் பிரச்சனையை வாங்க தேசத்து வங்காளிகளுக்கு உதவி, அவர்கள் பாகிஸ்தானில் இருந்து பிரிய, தனி தேசம் அமைக்க உதவி செய்தது போல் செய்ய முயவில்லை என்பது உண்மையே. அதற்கு முதல் காரணம், தமிழ் நாட்டில் உள்ள புலி ஆதரவாளர்கள் உண்மை நிலையை சரியாக புரிந்து, எடுத்து சொல்லாதது தான் என்பது ஏன் எண்ணம்.
பதிவருக்கும் ஒரு வேண்டுகோள்: தயவு செய்து ஆரிய/திராவிட வாதத்தை முன் வைக்க வேண்டாம்; அது பிரச்னையை திசை திருப்புகிறது. கருணாநிதி போன்றோருக்கு இது அவல்; இதை மென்று கொண்டே, உருப்படியாக ஒன்றும் செய்யாமல், மலர்க் கிரீடங்கள், விழாக்கள் எடுக்க வேண்டுமானால் உதவலாம்.
வலைப் பகுதி எண்ணத்தை விட்டு வெளியே வாருங்கள்; தமிழர்கள் இந்தியர்கள்; ஆரியர், திராவிடர் என்று பிரிவுகள் இல்லை. இந்தியாவில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் தமிழர் பங்கு தவறாமல் உண்டு; மிகப் பெரிய ஊழலான 1,76,000 கோடியை திருடியது தமிழர் தலைமையில் செயல் பட்ட கூட்டணியே. அதில் ஷஹீத் உஸ்மான் பலவா, சந்தொலியா, அம்பானியின் கைத்தடிகள், என அனைத்து தரப்பினரும் கூட்டு கொள்ளையே. இந்தியாவில் சாதி, இன, மத வேறுபாடுகளை மறந்து கூட்டாக செயல் பட நாங்கள் பழகி விட்டோம்.
innum சொல்ல பல இருக்கின்றன. நீண்டு கொண்டே போவதால், நிறுத்துகிறேன்.
உங்கள் தலைப்பு சரியே: புதிய ஆலோசனைகளை துவங்க வேண்டும்.
http://natramizhan.wordpress.com/2011/04/29/%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95/#comment-170