Monday, December 13, 2010

14/12/2010http://vennirairavugal.blogspot.com/2010/12/176000.html

pinnoottam: 14.12.2010
ஐயா இதில் "அவா" எங்கிருந்து வந்தா? டாடாவா? நீரா ராடியாவா? ராஜாவா? பர்காவா? சாங்க்வியா? மாறனா? கனிமொழியா?
பேசும் விஷயம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் என்று சம்பந்தமில்லாமல் "அவாளை" கொண்டு வரும் மன மாச்சர்யம் மாற vendum . கொள்ளை அடிப்பவன் எவனோ, அவாளோ அவர்களைத் தூக்கில் இட vendum : நம் குப்பத்து ராசாவோ அல்லது அவா அக்ராஹாரத்து அம்பியோ, நடு தெரு நாடாரோ, மசூதித் தெரு மொய்தீனோ - யாரை இருந்தால் என்ன? இந்த மன நிலை வரும் வரை - மன்னிக்கவும் - தமிழகம் உருப்படாது.

Saturday, September 4, 2010

http://abulbazar.blogspot.com/ 4 sep 2010

சுருக்கமாக சொல்லி இருக்கிறீர்கள். நன்றாக உள்ளது.
அறுபது ஆண்டு நிகழ்வுகளை இரு பதிவுகளில் சொல்வது கடினம்.
சர்தார் படேல் இந்தியாவில் உள்ள "சமஸ்தானங்களின்" அரசருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு இந்தியாவில் இணைத்தார். காஷ்மீர் அரசர் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். பாகிஸ்தான் அதே போல செய்ய முடியவில்லை.
அந்த படையெடுப்பு நிகழ்ந்திராவிட்டால் இந்தியாவுக்கு இந்த நிரந்தர தலைவலி வந்திருக்காது.
தம் எதிர்காலத்தை முடிவு செய்து கொள்ள ஓட்டெடுப்பு நடத்தப்பட்டிருக்கவேண்டும் என்பது சரி தான். ஆனால் இனக்கலவரங்களினால் பல இந்து பண்டிட்டுகள் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டதால் அவர்கள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள முடியாத நிலைமையும் நடத்தப்படாததற்கு ஒரு காரணம்.
ஜவஹர்லால் நேரு காஷ்மீரைச் சேர்ந்தவர் என்பதால் இந்தியாவை விட நேசித்ததைவிட இந்தியப் பிரதமர் என்பதை அதிகமாக நேசித்தவர் என்பதால் காஷ்மீர் இந்தியாவின் கை விட்டு போவதை அவர் உள்ளபடி விரும்பவில்லை எனலாம். When emotinal issues override reason, incorect decisions are taken and the consequences are there for all to see.

Friday, September 3, 2010

pinnoottam 4 sept 2010

http://govikannan.blogspot.com/2010/09/blog-post_03.html
பெரியாரின் பார்ப்பன எதிர்ப்புக்கு தரப்படும் முதன்மை சாதி ஒழிப்புக்கு தரப்படவில்லை. சாத்தியம் ஒழிய வேண்டும் என்பதே பெரியாரின் குறிக்கோள்.
தற்கால பகுத்தறிவாளர்கள் தங்கள் வீரத்தை பார்ப்பனர்களை வசை பாடுவதுடன் நிறுத்திக்கொள்கிறார்கள். பிற சாதி தீய வழக்கங்களை, தலித்துகளை நடத்தும் முறை பற்றி வாய் திறப்பதில்லை.
பெரியாரின் மைய நோக்கம் அதாவது சாதி ஒழிப்பு சமூகத்தில் வரவேண்டும் என அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொள்வோம்.
சிலை ஒரு அடையாளமே; மனப் போக்கு மாற வேண்டும். முதல் மாற்றம் வலைகளில் தொடங்கட்டும்.

Wednesday, August 11, 2010

pinnoottam: 11/08/2010

http://inioru.com/?p=16014&cpage=1#comment-12365
காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க நடுவண் அரசு உண்மையாக விரும்பி (அப்படி ஒரு வாதத்துக்காக எடுத்துக் கொள்வோம்) அதை வெறும் பாகிஸ்தானை ஆதரிக்கும் முஸ்லீம் கலகக் காரர்கள் என நோக்காமல், பெருவாரியான மக்கள் தம்மை இந்தியாவின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ளாத காரணம் என ஆய்ந்து அந்த அடிப்படைக் காரணங்களை வேரறுக்கும் எந்த ஒரு முயற்சியும் வரவேற்கப்பட வேண்டியதே. பிரிவினையின் பொது இருந்த தலைமுறை இந்து-முஸ்லீம் என மத வேறுபாடு காரணங்களை தலையாகக்
கருதுவது புதிது அல்ல. ஆனால், பிரிவினைக்கு பின் வந்த தலைமுறை, பொருளாதாரக் காரணங்களை முன் நிறுத்துவது ஒரு விதத்தில் சரியான அணுகுமுறையே. ஆதலால், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அமைந்தால் , அவர்கள், பிரிவினை அல்லது மத வாதிகளின் பின் செல்லாமல், பொருளாதாரக் காரணங்களினால் குண்டு வெடிப்புக்கும், கல் எறிவதற்கும் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள் என எதிர் பார்ப்பது சரியே.
அதாவது அங்கு தொழில் பெருக வேண்டும். மைய அரசு தொடங்கிய நிறுவனங்கள் (உதாரணம் : எச் எம் டி) நல்ல விதமாக செயல் படுவதாகத் தெரியவில்லை.
பொதுத் துறையோ, தனியார் துறையோ தொழில் பெருகட்டும் என்றே நாம் எண்ணவேண்டும். அரசியல் வாதிகளும், அரசு அதிகாரிகளும் இல்லாத குழு உருப்படியாக ஏதேனும் செய்ய வாய்ப்பு என வரவேற்போம்.
மேலும், இதை அரசியல் பிரச்னையாக நோக்கி, சில அரசியல் வாதிகளே இதைப் பற்றி பேசி, குழப்பி, பிரச்னையை அறுபது ஆண்டுகளாக தீர்வு இல்லாமல் இருந்து வருகையில், சில புது முகங்களை தேடுவதே ஒரு நல்ல ஆரம்பம் அல்லவா?
.

Friday, May 14, 2010

படித்ததில் பிடித்தது :

http://nanavuhao.wordpress.com

கவுண்டமணி, கொசுத்தொல்லை, மதமாற்றம்…!
April 26, 2010
பதிவுக்கு வந்த பின்னூட்டத்திலிருந்து சுட்டது

“When the missionaries came to Africa, they had the Bible and we had the land. They said “let us close our eyes and pray.” When we opened them, we had the Bible, and they had the land” இதை சொன்னவர் பிஷப் டெஸ்மண்ட டூ டூ என்றவர்! இவரைப்போல மற்ற மதங்களை தூற்றாத நல்ல கிருத்துவர்கள், அதாவது இயேசுவின் வழியே கிருத்துவம்

Tuesday, May 4, 2010

உலகில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்கள் : 2050 ஆண்டு

Tuesday, 4 May 2010

உலகில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்கள் : 2050 ஆண்டு

உலகில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்கள் : 2050 ஆண்டு!

உலகின் மக்கள் தொகையைப் பற்றி பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இன்னும் நாற்பது ஆண்டுகளில், இப்போது உலகில் நான்கில் ஒரு பங்காக இருக்கும் முஸ்லீம்கள் மூன்றில் ஒருவர் ஆவர் என சொல்கிறது:
http://indianmuslims.in/one-third-of -world-population-in-2050-will-be-muslim/

ஒரு நாட்டின் மக்கள் தொகை அதே அளவில் தொடர, பிறப்பு விகிதம் இரண்டு அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். அமெரிக்காவின் விகிதம் 2.1; வெளி நாட்டினர் குடிபெயர்தலினால் இந்த விகிதம்; ஐரோப்பியாவில், இருபது நாடுகளில் இது சுழி (பூஜ்யம்) அல்லது அதற்குக் கீழ் ("நெகடிவ்") ஆகும். ஜப்பானிலும் அங்ஙனமே உள்ளது. ரசியாவில் 28% மக்கள் தொகை குறையும் (46.8 million to 33.4 million).
ஆசியாவிலும், ஆப்ரிக்காவிலும் மட்டுமே மக்கள் தொகை பெருகும்.

இப்போது முஸ்லீம்கள் உலகில் 23% உள்ளனர்; ( 1.57 billion out of 6.80 billion); அவர்களில் அறுபது சதவீதம் ஆசியா(இந்தோனேசியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்) மற்றும் இருபது சதவீதம் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்ரிகா) அவர்கள் 2050-ல் உலகில் மூன்றில் ஒருவர் (33%) ஆவர். ஐரோப்பியாவில் முஸ்லீம்கள் தற்போது ஐந்து சதவீதம் உள்ளனர்; அவர்கள் இருபது சதவீதமாவர்.

(ஐயோவா, அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவர்: திரு அனீஸ் அன்சாரி எழுதியது. )

Monday, January 11, 2010

முதல் முயற்சி

முதல் முயற்சி

கொஞ்சம் நல்ல நல்ல அறிவு பூர்வமான வாதங்களை பார்ப்போம்.

மீண்டும் சந்திப்போம்