Tuesday, June 21, 2011

21/06/2011

http://idlyvadai.blogspot.com/2011/06/blog-post_16.html
ஒன்று: அன்று அவ்வாறு சொன்ன பொது கலைஞர் ஆட்சி அதை விட மோசமாக இருக்கும்
என்று எதிர்பார்க்கவில்லை. (தமிழக மக்கள் எண்ணமும் அவ்வாறே இருந்தது.). பின்பு எதிர்பார்ப்பு தவறு என்று உணர்ந்தபின் எண்ணம் மாறுவது தான் இயற்கை. இதில் அதிசயம் ஒன்றும் இல்லை.
இரண்டு: தமக்கு நல்லது இல்லை என்றால் ஊருக்கே நல்லது இல்லை என்று நினைப்பது மனித குணம். காங்கிரஸ் தனக்கு ஆபத்து என்றால் நாட்டுக்கே கேடு என்று அலறும் (ராமதேவ், ஹஜாரே உண்ணாவிரதம்.) தனக்கு ஆபத்து என்றால் தமிழுக்கு ஆபத்து என்று அலறுவது தமிழ் இனத்தலைவர் .
அதே போல் அம்மையார் மீண்டும் வருவது தமக்கு நல்லது இல்லை என்று எண்ணிய ரஜினி, நாட்டுக்கே கேடு என்று அலறி இருக்கிறார்.

Friday, June 17, 2011

17/06/2011

http://www.sinthikkavum.net/2011/06/blog-post_3992.html
மனுவிற்குப் பிறகு எவ்வளவோ சிந்தனையாளர்கள் வந்து, பழைய சிந்தனைகளை மாற்றி
புதிய வழக்கங்களை, விதிமுறைகளை, வழக்கில் கொண்டு வந்து விட்டன. உதாரணத்திற்கு திருமண வயது இப்போது தொண்ணூற்று ஒன்பது
விழுக்காடு பதினெட்டிற்கு மேலேயே நடக்கின்றன; ராஜஸ்தானில், உத்தர் பிரதேசத்தில் ஓரிரு திருமணங்கள்
பதினைந்து வயதில் நடக்கலாம். அதே போல் தான் விதவை மறு மணமும் .
நாம் பதிய வேண்டியது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனு கூறிய அபத்தங்கள் என்ன
என்பது அல்ல; பின் வந்த காலங்களில் இந்துக்கள் புதிய சிந்தனைகளை ஏற்றுக்கொண்டு தம் செயல்களை, நடை முறைகளை
மாற்றிக் கொண்டார்கள் என்பதே. இன்னும் பல மாற்றங்கள் வரவேண்டும்
என்றிருக்கலாம். அதற்கு முயல்வோம்.
எனினும், குர்ஆனில் சொன்னது தான் இறுதி விதி,
இடைப்பட்ட ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளில் பற்பல மாற்றங்கள் அறிவியலிலும், சமூகவியலிலும், மாற்றங்கள் வந்துவிட்டாலும், குரான் அந்த கால கட்டத்த்ற்கு ஏற்றபடி சொன்னவற்றை இந்த கால கட்டத்தில்
மீள் பார்வை செய்வது தவறு;
அதில் சொன்ன படியே இப்போதும் செய்வோம் என்று சொல்லும்
இஸ்லாமியர்களை விட இந்துக்கள் மேல்
என்ற உண்மையைக் கூறுங்கள்.
இல்லை பகுத்தறிவுப்பாசறை இந்துக்களிடையே ஒரு காலத்தில் இருந்த பழக்க வழக்கங்களை மீண்டும் மீண்டும் அலுக்காமல் சொல்லுமே தவிர, இஸ்லாமிலும், கிருத்தவர்களிலும் இன்றும் உள்ள மூட அணுகுமுறைகளைப் பற்றி சொல்லக் கூடாதா?