http://inioru.com/?p=16014&cpage=1#comment-12365
காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க நடுவண் அரசு உண்மையாக விரும்பி (அப்படி ஒரு வாதத்துக்காக எடுத்துக் கொள்வோம்) அதை வெறும் பாகிஸ்தானை ஆதரிக்கும் முஸ்லீம் கலகக் காரர்கள் என நோக்காமல், பெருவாரியான மக்கள் தம்மை இந்தியாவின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ளாத காரணம் என ஆய்ந்து அந்த அடிப்படைக் காரணங்களை வேரறுக்கும் எந்த ஒரு முயற்சியும் வரவேற்கப்பட வேண்டியதே. பிரிவினையின் பொது இருந்த தலைமுறை இந்து-முஸ்லீம் என மத வேறுபாடு காரணங்களை தலையாகக்
கருதுவது புதிது அல்ல. ஆனால், பிரிவினைக்கு பின் வந்த தலைமுறை, பொருளாதாரக் காரணங்களை முன் நிறுத்துவது ஒரு விதத்தில் சரியான அணுகுமுறையே. ஆதலால், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அமைந்தால் , அவர்கள், பிரிவினை அல்லது மத வாதிகளின் பின் செல்லாமல், பொருளாதாரக் காரணங்களினால் குண்டு வெடிப்புக்கும், கல் எறிவதற்கும் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள் என எதிர் பார்ப்பது சரியே.
அதாவது அங்கு தொழில் பெருக வேண்டும். மைய அரசு தொடங்கிய நிறுவனங்கள் (உதாரணம் : எச் எம் டி) நல்ல விதமாக செயல் படுவதாகத் தெரியவில்லை.
பொதுத் துறையோ, தனியார் துறையோ தொழில் பெருகட்டும் என்றே நாம் எண்ணவேண்டும். அரசியல் வாதிகளும், அரசு அதிகாரிகளும் இல்லாத குழு உருப்படியாக ஏதேனும் செய்ய வாய்ப்பு என வரவேற்போம்.
மேலும், இதை அரசியல் பிரச்னையாக நோக்கி, சில அரசியல் வாதிகளே இதைப் பற்றி பேசி, குழப்பி, பிரச்னையை அறுபது ஆண்டுகளாக தீர்வு இல்லாமல் இருந்து வருகையில், சில புது முகங்களை தேடுவதே ஒரு நல்ல ஆரம்பம் அல்லவா?
.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment