http://ujiladevi.blogspot.com/2011/01/blog-post_03.html#comment-form
சுவாமிநாதன் அவர்களைக் குறை கூற முடியாது. அப்போது இருந்த நிலை உற்பத்தியை பெருக்க வேண்டும் என்ற ஒரே நோக்குடன் செயல் படுத்த வைத்தது. விளைச்சல் குறையவில்லை; பயிர் செய்யும் பரப்பு அதே அளவோ,அல்லது குறைந்தோ இருந்தாலும் அளவு அதிகமாகவே ஆகயுள்ளது எனத் தோன்றுகிறது.
மானியம் என்று வந்து விட்டதால், அளவுக்கு அதிகமாக போடுவது, பொட்டாசியம் அல்லது பாஸ்பரம் வேண்டிய நிலையிலும் யூரியா போடுவது என்று குளறுபடிகள் ஒரு காரணம். நீர்ப்பாசனம் பெரிய அளவில் மேன்மை அடைந்ததாக தெரியவில்லை.: நர்மதா குறுக்கே அணையும், அதன் காரணமாக மத்திய பிரதேஷ், மற்றும் குஜராத்துக்கு நீர் பாசனம் தவிர. அரசுகள் தொலை நோக்கு திட்டங்கள் எதுவும் கொண்டுவரவில்லை.
உலகமயமாக்கல் துவங்கிய பின், உணவு உற்பத்தியில் தன்னிறைவு என்றெல்லாம் பேசப்படுவது கூட இல்லை. அது பழைய பாஷன்.
மாநில அளவிலும் நீர் நிலைகளை பராமரித்தல் என்பன அறுபத்தேழுக்குப் பின் சரி இல்லை என என் நண்பன் கூறுகிறான். எனக்கு இது குறித்த விவரம் தெரியவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment