Wednesday, March 23, 2011

23/03/2011

http://bharathbharathi.blogspot.com/2011/03/blog-post_22.html
கடைசி வரை காக்க வைத்து, அவருக்கு பத்துக்கு மேல் தேறாது என்று சொல்லிய விதம் சகோதரிக்கு புதிதல்ல. அவர் கோபம் ஒரு விதத்தில் நியாயமானதே.
ஆனால், ஒரு விஷயத்தை பதிவர்கள் சரியாக கோடிட்டு காண்பிக்கவில்லை: இலங்கை தமிழர்கள் குறித்து தமிழகத்திலும், பிறகு இந்திய அரசிடமும் சரியான கருத்து உருவாக ஒருவரும்- ரிபீட்டு- ஒருவரும் ஒன்றும் செய்ய வில்லை.
thamizh நாட்டிற்குள்ளேயே இலங்கை பிரச்னையை சரியாகப் புரிந்து கொண்டவர்கள் இருபது-இருபத்தைந்து சதவீதம் இருக்கலாம்; அவர்களிலும்,
- ராஜீவ் காந்தி மரணம்
- புலிகள் இலங்கை தமிழர்களின் ஒரு பகுதியின் நலத்தையே பேசுகிறார்கள்;
- புலிகள் பிற தமிழ் குழுக்களை களைந்து கொடி நாட்டியவர்கள்
- இந்திய இறையாண்மை; இலங்கை இறையாண்மை;
- புலிகள் தங்கள் கொள்கையை விளக்கி இந்திய அரசின் துணையை ஒரு போதும் நாட வில்லை;
- இலங்கை முஸ்லீம்களை இரக்கம் இல்லாமல் அழித்தவர்கள் (மசூதியில் தொழுது கொண்டு இருந்தவர்களை குண்டு போட்டு தாக்கியது)
- போரில் தம் நிலை பலமில்லை என்று சரியாக மதிப்பிடாமல் அல்லது தெரிந்த பின்னும் போரைத் தொடர்ந்து அப்பாவி மக்களை காவு கொடுத்தார்கள்
என்ற பல கோணங்கள் உள்ளன; இது தமிழர்கள் இடையே மட்டுமே உலவும் கருத்துக்கள் என வெவ்வேறு பதிவுகளில் கண்டிருக்கிறேன். இவற்றில் எது பெரும்பாலும் சரி அல்லது பெரும்பாலும் தவறு என்று நான் என் மதிப்பீட்டை வழங்கவில்லை.
வைகோவும், நெடுமாறனும், சீமானும், அப்போதப்போது கனைக்கும் தொல் திருமா போன்றவர்களும் பல சுதிகளில், வெவ்வேறு பாடல்களை கத்திக் கொண்டு (cacophony) இருந்தார்களே தவிர, செயல் முறையில் பலன் அளிக்கும் வகையில் ஒன்றும் செய்யவில்லை.
எனவே வைகோ காங்கிரசை தோற்கடிக்கிறேன் என்று இலங்கை தமிழர்கள் பெயர் சொல்லி எத்தனை தொகுதிகளில் டெபாசிட் தக்க வைத்துக் கொள்ள முடியும்?

No comments:

Post a Comment