Friday, April 8, 2011

08/04/2011 pinnoottam

http://kgjawarlal.wordpress.com/2011/04/07/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%b9%e0%ae%b8/ வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்காக ஒம்புட்ஸ்மன் என்ற ஒருவர் இருக்கிறார். ஒரு வங்கி தமக்கு சரியான வட்டி அளிக்கவில்லை (தவறான வட்டி வீதம்), தம் காசோலையை நிலுவை இருந்தபோதும் தவறுதலாக திருப்பி, இழப்பு ஏற்படுத்தியது என்பது போன்ற புகார் கொடுத்தால், ஒம்புட்ஸ்மன் மூன்று மாதங்களுக்குள் வங்கியின் மறுமொழியைக் கேட்டுப்பெற்று ஆணை பிறப்பிக்கிறார்; அதை மீறவேண்டும் என்றால் உயர் நீதி மன்றம் செல்ல வேண்டும். இதன் மூலம் நூற்றுக்கணக்கான விஷயங்கள் நீதி மன்றம் சென்று ஆண்டுகள் இழுக்கடிக்காமல் முடிவு வந்தும் விடுகிறது. இது போன்ற அரசுடன் ஏற்படும் குறைகளை, கேட்க, விசாரிக்க ஒம்புட்ஸ்மன் போன்ற அமைப்பை இந்த லோக் பால்/ லோக் ஆயுக்தா உருவாக்கும். எனவே பொது மக்களுக்கு அரசு ஊழியர்களின் சுனக்கத்தால் நின்று, தாம் ஒன்றும் செய்ய இயலா நிலை மாறும். அரசிடம் உள்ள குறைகளுக்கு, அரசியல்வாதிகளை விட அரசு அதிகாரிகளின் கடமை செய்யாமையே காரணம் ஆகும். கையூட்டு எதிர்பார்த்து பணியை செய்யாமல் இருப்பதே அதிகப்படியான காரணம் என்ற பொதுவான எண்ணம் உள்ளது. அதை இந்த அமைப்பு தீர்க்கும். அரசியல்வாதிகளும் பெரிய அளவில் ஊழல் செய்ய முடியாமல் போகும்.

No comments:

Post a Comment