Tuesday, May 17, 2011

17/05/2011

"குடும்பத்தில் எல்லோரையும் அரசியலில் நுழைத்தது தவறு; மையத்தில் உள்ள அமைச்சர்கள் மட்டும் அல்ல, தமிழ்நாட்டிலும் பெரும்பாலான அமைச்சர்களும், அவர் அடிப்பொடிகளும் தினம் தோறும் ஊழல்கள் செய்து ஒவ்வொரு ஊரிலும், தொகுதியிலும் கழகத்தின் பெயரை நாற அடித்து விட்டார்கள்; ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் பணம் பலருக்கு போனது போல கலைஞர் தொலைக் காட்சிக்கும் வந்தது; கையொப்பம் இட்டது தயாளு அம்மாளுவும், கனிமொழியும்; தவிர திரை உலகில் குடும்பத்தின் நடவடிக்கைகள் பலரை நஷ்டம் அடைய வைத்தன " என்றும்
"இனிமேல், ஸ்டாலின் மாத்திரமே அரசியலில் இருப்பார், அவர் கழகத்தை தலைமை தாங்கி வழி நடத்துவார், அதற்கு, கழகத்தில் ஒரு மனதாக இதற்கு ஒப்புதல் இல்லை என்றால் குடும்பத்துக்கு வெளியிலிருந்து தலைவர் வருவார்; குடும்பத்தை விட கழகமே பெரியது; (வைகோ மீண்டும் வந்தால் தலைமை தாங்கி நடத்தட்டும்) " என்றும் தலைவரும், மற்ற கழக தொண்டர்களும் பேசினால் சரியாக இருக்கும்.

ஜெயலலிதாவிற்கு எவரும் வாக்கு அளிக்கவில்லை. இரண்டு கொள்ளிகளில், ஒன்று அதிகம் காந்துகிறது என்று தூர எறிந்து விட்டார்கள். அவர் அமைச்சரை எப்படி அவமானப்படுத்தினார் என்றெல்லாம் எழுத வேண்டாம். திசை மாறிப் போகிறோம். நம் சட்டைப்பையில் சாணத்தை வைத்துக்கொண்டு ஜெயின் புடவை ஓட்டையைப் பற்றி எழுதினால், நம் சீர்திருத்தப் பணி துவங்காது. கழகம் மு,கவின் கடந்த பதினைந்து வருட காலத்தில் சீர் அழிந்து விட்டது. அதை நேர் செய்வோம். இல்லையெனில், நிச்சயமாகச் சொல்கிறேன், இன்னும் ஐந்து ஆண்டு கழித்து அம்மாவைத் தூக்கி எறிய தமிழகம் நினைக்கும் போது கழகம் நல்ல கொள்ளி என்று காணப்பட வேண்டாமா? http://lakaram.blogspot.com/2011/05/blog-post.html

No comments:

Post a Comment